ஜாவா


ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதன் முதலில் 1929 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1960 ஆம் ஆண்டு Ideal Jawa (India) Ltd நிறுவனத்தால் ஜாவா பைக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 1970 மற்றும் 1980 களில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்த ஜாவா பைக்குகளின் விற்பனை 1996 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா நிறுவனம், ஜாவா பைக்கை மீண்டும் இந்தியா மற்றும் ஒருசில ஆசிய நாடுகளில் வெளியிடும் உரிமத்தையும் கைப்பற்றியது. அதன்பிறகு மஹிந்திரா நிறுவனம், கிளாசிக் லெஜெண்ட்ஸ் எனும் நிறுவனம் மூலம் ஜாவா மோட்டார் பைக் மாடல்களை இந்தியாவில் மீண்டும் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டது. 

Showing all 2 results