செப்டம்பர் 21 அன்று 4 மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடுகிறது ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 21 அன்று அயன் 833, போர்ட்டி எய்ட், ஸ்ட்ரீட் 750 மற்றும் ரோடு கிங் ஆகிய நான்கு மாடல்களை வெளியிட இருக்கிறது. 

ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் இந்த மாடல்களிலும்  ஒப்பனை மற்றும் என்ஜினில் சில மாற்றங்களை செய்து வெளியிட இருக்கிறது.  ஸ்ட்ரீட் 750 பழைய மாடலில் ப்ரேக்கில் சில பிரச்சனைகள் இருப்பதால் முன்புறம் மற்றும் பின்புறம் ஆகிய இரண்டு ப்ரேக் சிஸ்டமும் மாற்றப்படுகிறது. 

அயன் 833 மாடலில் சஸ்பென்சன் சிஸ்டமும் போர்ட்டி எய்ட் மாடலில் அலாய் வீலும், டயரும் மாற்றப்படுகிறது. சொகுசான பயண அனுபவத்தை தருவதற்காக சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.