யமஹா நிறுவனம் YZF-R3 மாடலை 3.25 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டது (Yamaha - YZF-R3)

யமஹா  நிறுவனம் இந்தியாவில் YZF-R 3 மாடலை 3.25 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டது.  இந்த மாடல் யமஹாவின் R 25 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். இந்த மாடலில் உள்ள  இரட்டை முகப்பு விளக்குகள், பின்புற LED  விளக்குகள், ஸ்போர்டியான சிறிய புகைபோக்கி, ஒற்றை சஸ்பென்சன் மற்றும் அழகான அல்லாய் வீல் அகியவற்றை இதன் சிறப்பாக கூறலாம். 

மேலும் இந்த மாடலில் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டம் கிடைக்காது. இந்த மாடலில் 321 cc  கொள்ளளவு கொண்ட8 வால்வ் மற்றும்  2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு லிக்யுட் கூல்ட் என்ஜின் ஆகும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  42 bhp (10750rpm)   திறனும் 29.6 NM (9000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

இந்த மாடல் ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த கலவை என இரண்டு விதங்களில் கிடைக்கும்.  மேலும் இந்த மாடல் கவாசாகி - நிஞ்சா 300 மற்றும் KTM - RC 390 ஆகிய மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

இந்த மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
http://mowval.com/bike-overview.php?bike_company=5&bike_model=136

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.