2016 டெல்லி வாகன கண்காட்சி: எக்ஸ்ட்ரீம் 200 S மாடலை அறிமுகப்படுத்தியது ஹீரோ

ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 200 S மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இது எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் மாடலின் அடிப்படையில் 200 cc என்ஜின் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்ட மாடல்.

இந்த மாடலில் நிறைய புதிய அம்சங்களை சேர்த்துள்ளது ஹீரோ நிறுவனம். முகப்பு விளக்கு, முன்புறத்தில் பெரிய போர்க், பின்புறத்தில் ஒற்றை சஸ்பென்சன் ஆகியவை இந்த மாடலில் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS பிரேக்கும் கிடைக்கும்.

இந்த மாடலில் 200 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18.6 Bhp திறனையும் 17 Nm இழுவைதிறனையும்  வழங்கும். இந்த மாடல் இந்தவருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.