2016 டெல்லி வாகன கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்டது ஹீரோ HX250 பைக்கின் தயாரிப்பு நிலை மாடல்

ஹீரோ நிறுவனம் HX250 பைக்கின் தயாரிப்பு நிலை மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் HX250R என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ நிறுவனம் HX250R மாடலை அமெரிக்காவை சேர்ந்த எரிக் புல் ரேசிங் நிறுவனத்துடன் இணைந்து முதலில் வடிவமைத்து வந்தது.  கடன் பிரச்சினை காரணமாக எரிக் புல் நிறுவனம் விலக பிறகு ஹீரோ நிறுவனமே முழு பொறுப்பையும் எடுத்து கொண்டது. எரிக் புல் ரேசிங் நிறுவனம் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த மாடல் 2015 ஆண்டே வெளியிடப்பட்டிருக்கும்.

இருக்கைக்கு அடியில் உள்ள புகை போக்கி என இந்த மாடலை சிறப்பாக வடிவமைத்துள்ளது ஹீரோ நிறுவனம். இந்த மாடலில் ஒரு சிலிண்டர் கொண்ட 250 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 31 Bhp திறனையும் 26 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் ஹோண்டா CBR மற்றும் கவாசாகி நிஞ்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் 1.4 முதல் 1.6 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.