2016 டெல்லி வாகன கண்காட்சி: விதவிதமான மோஜோ மாடல்களை காட்சிப்படுத்தியது மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் மோஜோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அட்வென்ச்சர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த இரண்டு மாடலும் மிகவும் வித்தியாசமான வடிவத்தில் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் வெறும் காட்சிக்கு மட்டும் தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது விற்பனைக்கு கிடைக்காது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 295CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 Bhp (8000 rpm )  திறனும் 30 Nm (5500 rpm ) இழுவை திறனும் கொண்டது. மேலும் இந்தமாடலில் 6 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் சிவப்பு மற்றும் ஆரஞ்சு என  இரண்டு புதிய வண்ணங்களிலும் மோஜோ மாடல் வெளியிடப்பட்டது.  மேலும் ராயல் என்பில்ட் போல் மோஜோ  உரிமையாளர்களுக்கென பிரத்தியேகமான கிளப் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது மகிந்திரா நிறுவனம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.