2016 டெல்லி வாகன கண்காட்சி: X21 ரேசிங் எனும் கான்செப்டை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனம் 2016 டெல்லி வாகன டெல்லி வாகன கண்காட்சியில் X21 ரேசிங் எனும் பைக் கான்செப்டை அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் நிறுவனம் சமீப காலமாக அதிக திறன் மற்றும் ரேசிங் மாடல்கள் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறது அந்த வகையில் தற்போது X21 எனும் கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் சிறப்பான தோற்றத்துடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 212.4 cc கொள்ளளவு கொண்ட என்ஜின்  பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் முழுவதும் டிஜிட்டல் மயமானது.

இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.