2016 டெல்லி வாகன கண்காட்சி: அகுலா 310 மாடலை காட்சிப்படுத்தியது டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனம் அகுலா 310 எனும் ரேசிங் பைக் மாடலை 2016 டெல்லி வாகன  கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் BMW G 310 R மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. BMW நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

TVS நிறுவனம் 33 வருடமாக ரேசிங் துறையில் இருப்பத நினைவு கூறும் விதமாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. இந்த மாடல் முற்றிலுமாக ஒரு ரேஸ் பைக் மாடலின் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் BMW G 310 R மாடலில் உள்ள அதே 313 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 33.6 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும்.

இந்த மாடல் வெளியிடப்பட்டால் யமஹா R3 மற்றும் KTM RC 390 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் மைலேஜும் தரும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.