2016 டெல்லி வாகன கண்காட்சி: ரூ.10.2 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது யமஹா MT-09

யமஹா நிறுவனம் ரூ.10.2 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில்  MT-09 மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில பாகங்கள் MT-07 மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மேட் ப்ளூ மற்றும் ரேஸ் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடலில் 847 cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113.42 Bhp திறனையும் 87.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் முன்புறத்தில் 298 மிமீ விட்டம் கொண்ட டியூயல் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 245 மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS ஆப்சனலாக கிடைக்கும்.

இந்த மாடல் ஒரு ஸ்ட்ரீட் ரேசர் வகையை சேர்ந்தது. மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் முழுவது LCD மயமானது. இந்த மாடல் இந்தியாவில் கவாசாகி Z800, ட்ரியம்ப்  ஸ்ட்ரீட்  ட்ரிப்ல் மற்றும் பெனெல்லி TNT போன்ற மடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.