வெளிப்படுத்தப்பட்டது 2016 இந்தியன் சீஃப்டைன் டார்க் ஹார்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த சொருகு பைக் நிறுவனமான இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2016 சீஃப்டைன் டார்க்  ஹார்ஸ் மாடலை வெளிப்படுத்தியது. இது மேட் பிளாக் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில்  இருக்கும் சீஃப்டைன் மாடலில் இருந்து குரோம் அலங்காரங்களை நீக்கி முற்றிலும் கருப்பு வண்ணத்தில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற தோற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இந்த மாடலில் செய்யப்படவில்லை. அதே தண்டர் ஸ்ட்ரோக் 111 V- ட்வின் எஞ்சின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 1811 cc  கொள்ளளவு கொண்டது. இது அதிகபட்சமாக 161.6 Nm  இழுவைதிறனை வழங்கும். அதே போல் சிறப்பு வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. பவர் வின்ட் ஷீல்ட், ABS, ஆடியோ சிஸ்டம் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் என அணைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். 

இந்த மாடல் இந்தியாவில் இந்த வருட  இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நிறைய குரோம் அலங்காரங்கள் நீக்கப்பட்டுள்ளதால் ரூ. 1 முதல் 2 லட்சம் வரை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சீஃப்டைன் மாடலை விட விலை குறைவானதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.