ரூ.1.71 லட்சம் மற்றும் ரூ.2.25 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு KTM RC200 மற்றும் RC390

பஜாஜ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு  KTM  RC200  மற்றும் RC390 மாடல்களை ரூ.1.71 லட்சம் மற்றும் ரூ.2.25 லட்சம் டெல்லி ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை புதிய வண்ணம் மற்றும் கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு மாடல்களுமே யூரோ4 மாசுக்கட்டுப்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு மாடலிலுமே பின்புற இருக்கை வடிவமைப்பு சிறிது மாற்றப்பட்டுள்ளது. KTM  RC200 மாடலில் 199.5 CC  கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26 BHP   திறனும் 19.2 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் புகை போக்கி அடிப்புறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

KTM  RC390 மாடலில் 373.3 CC  கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43.5 BHP   திறனும் 36 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் புகை போக்கி பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS  நிரந்தர ஆப்ஷனாக கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.