ரூ 15.59 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு MV அகுஸ்டா ப்ருட்டல் 800

மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு MV அகுஸ்டா ப்ருட்டல் 800 மாடல் ரூ 15.59 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விநியோகம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும். மேலும் இந்த மாடலை ஷோரூம்களிலோ அல்லது இணையத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாடலில் புதிய LED முகப்பு விளக்குகள், புதிய பின்புற அமைப்பு  மற்றும் புதிய இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 798cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 Bhp@ 11,500rpm திறனையும் மற்றும் 83Nm @7600 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 237 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.