இந்தியாவில் வெளியிடப்பட்டது 2017 சுசூகி GSX-R1000 மற்றும் GSX-R1000R

சுசூகி நிறுவனம் 2017 ஆம் ஆண்டு GSX-R1000 மற்றும் GSX-R1000R மாடல்களை முறையே ரூ 19 லட்சம் மற்றும் ரூ 22 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு அனைத்து ஷோரூம்களிலும் நடைபெறுகிறது. ரூ 1 முதல் 5 லட்சம் வரை நகரத்துக்கு ஏற்றவாறு முன்பணமாக பெறப்படுகிறது.  இதன் விநியோகம் ஜூன் மாதம் முதல் தொடங்கப்படும். இது தான் சுசூகி நிறுவனத்தின் விலைஉயர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் ஆறாவது தலைமுறை மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் ஏரோ டைனமிக் என இந்த மாடல் முழுவதுமாக மாவ் வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 999.8cc கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் லிக்யுட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 202.1Bhp திறனையும் 117.5Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது 2016 ஆம் ஆண்டு மாடலை விட 16.5Bhp அதிக திறனுடையது. இந்த மாடலில் சுசூகியின் MotoGP பைக்கில் உள்ள வால்வு டைமிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம், LCD டிஸ்பிளே மற்றும் LED முகப்பு விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

GSX-R1000R மாடலில் கூடுதலாக லான்ச் கண்ட்ரோல், பை-டிரெக்ஷனால் ஷிபிட்ர், பேலன்ஸ் பிரீ சஸ்பென்ஷன், கார்னரிங் ABS மற்றும் LED பொசிஷனிங் விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. GSX-R1000 மாடல் ப்ளூ மற்றும் மேட் கருப்பு வண்ணங்களிலும் GSX-R1000R மாடல் ப்ளூ மற்றும் ஸ்பார்க்ள் கருப்பு வண்ணங்களிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.