ரூ.13.88 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2017 சுசூகி ஹயபூசா

சுசூகி நிறுவனம்  2017 ஆம் ஆண்டு ஹயபூசா மாடலை ரூ.13.88 லட்சம் என்ற சவாலான விலையில் வெளியிட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடல் புதிய வெள்ளை, கருப்பு மற்றும் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த மாடலில் 1340 cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  197 bhp (9500rpm)   திறனும் 155 Nm (7200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 299 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது இந்த மாடல் தான் மிக அதிக வேகம் செல்லும் தயாரிப்பு நிலை மாடலாக இருந்தது. இப்போதும் மிக அதிக வேகம் மற்றும் அதிக திறன் கொண்ட மாடல்களில் குறிப்பிட தகுந்த ஒன்று ஆகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.