2017 ஆம் ஆண்டு ட்ரியம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் மாடலின் முன்பதிவு தொடங்கியது

ட்ரியம்ப் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஸ்ட்ரீட் ட்ரிபிள் நேக்ட் மாடலின் முன்பதிவை தொடங்கியது. இந்த மாடல் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விநியோகம் ஜூன் மாத இறுதியில் தொடங்கப்படும். இந்த மாடலை ரூ 1 -2 லட்சம் வரை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாடலும் முந்தய மாடலின் வடிவமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் எஞ்சின், டிசைன் மற்றும் உபகரணம் ஆகியவற்றில் சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய மூன்று சிலிண்டர் கொண்ட 765cc  எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113Bhp  (11250rpm ) திறனையும் 73Nm (9100rpm) இழுவைத்திறனையும் வழங்கும். முன்புறத்தில் 310 மில்லிமீட்டர் விட்டமும் முன்புறத்தில் 220 மில்லிமீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் முந்தய மாடலை விட 2 கிலோ குறைவான எடையும் 10  மில்லிமீட்டர் அதிக இருக்கை உயரமும் கொண்டது. இந்த மாடல் ரூ 8 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.