வெளிப்படுத்தப்பட்டது 2017 யமஹா SCR950 ஸ்க்ராம்ப்ளர்

யமஹா நிறுவனம் 2017 SCR950 ஸ்க்ராம்ப்ளர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. யமஹா நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் செக்மேண்டில் பெருகி வரும் போட்டியை சமாளிக்க இந்த மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் யமஹாவின் பழமையான DT250 மாடலின் அடிப்படையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் குரூஸ் மற்றும் ஸ்போர்ட் வடிவங்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2017 SCR950 மாடலின் 942 cc  கொள்ளளவு கொண்ட ஏர் கூல்ட், V - ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஆரம்ப நிலையில் சிறந்த இழுவைதிறனை வழங்கும். இந்த மாடலில் பின்புற LED  விளக்கு, LCD  சென்டர் கன்சோல் என ஏராளமான மாடர்ன் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் சில்வர்  மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த இரண்டு வண்ணங்களிலுமே சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ண ரேசிங் கிராபிக்ஸ் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என எந்த தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.