2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளியிடப்பட்டது அப்ரிலிய SR125 ஸ்கூட்டர்

பியாஜ்ஜியோ நிறுவனம் அப்ரிலிய SR125 ஸ்கூட்டர் மாடலை ரூ 65,310 புனே ஷோரூம் விலையில் தற்போது நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் அப்படியே SR150 ஸ்கூட்டர் மாடல் போலவே தான் உள்ளது. அப்ரிலிய நிறுவனம் SR150 ஸ்கூட்டர் மாடலை ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. SR150 ஸ்கூட்டர் மாடலில் உள்ள அதே வடிவமைப்பு தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய ப்ளூ மற்றும் சில்வர் வண்ணங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் பெரிய மாற்றம் என்பது புதிய 125cc எஞ்சின் மட்டும் தான். இந்த மாடலில் வெஸ்பா மாடலில் உள்ள 125cc எஞ்சின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.65bhp (7250rpm) திறனும் 9.9Nm (6250rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் CVT கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய SR125 ஸ்கூட்டர் மாடல் ஹோண்டா கிரேசியா, TVS NTORQ மற்றும் விரைவில் வெளியிடப்படும் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.