2018 டெல்லி வாகன கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது TVS கிரேயன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

TVS நிறுவனம் புத்தம் புதிய கிரேயன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தான் TVS நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரேயன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் TVS நிறுவனம் வெளியிடவில்லை.

TVS கிரேயன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஏராளமான கனக்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த TFT ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கென பிரத்தியேக ஆப் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஆப் கிளவுட் கனெக்டிவிட்டி, GPS, பார்க் அசிஸ்ட், ஆன்டி தெப்ட் அலெர்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மூலம் பேட்டரி சார்ஜ் மற்றும் எவ்வளவு சார்ஜ் மீதம் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

TVS கிரேயன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் மூன்று லித்தியம்-அயர்ன் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணைந்து 16PS திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் வலை செல்லும். இந்த மாடலில் மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் டிஸ்க் மற்றும் ABS பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.