வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB ஹார்னெட் 160R

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய CB ஹார்னெட் 160R மாடலை ரூ 83,675 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • CB HORNET 160R STD    - ரூ 83,675
  • CB HORNET 160R CBS    - ரூ 88,175
  • CB HORNET 160R ABS STD    - ரூ 89,175
  • CB HORNET 160R ABS DLX    - ரூ 91,675

புதிய 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB ஹார்னெட் 160R மாடலில்  ABS சிஸ்டத்துடன் கூடுதலாக புதிய LED முகப்பு விளக்குகள், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், புதிய கிராபிக்ஸ் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பச்சை, ஆரஞ்சு, ப்ளூ, சிவப்பு மற்றும் மஞ்சள் என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 162.71cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.9 bhp (8500 rpm) திறனும்  14.5 Nm (6500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலின் முன்புறத்தில் 276 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில்  220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.