ரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்

ஹோண்டா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு CB1000R+ மாடலை ரூ 14.46 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஹோண்டா வேர்ல்ட் விங் டீலர்ஷிப்பில் மட்டுமே கிடைக்கும், மேலும் இதன் முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் நியோ ஸ்போர்ட் கேப் எனும் டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 998cc கொள்ளளவு கொண்ட நான்கு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 145PS @ 10,500rpm திறனையும் 104Nm @ 8,250rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் Standard, Sport மற்றும் Rain  என மூன்று வித டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் திறனை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் முன்புறத்தில் 310mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 256mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டியூவல் சேனல் ABS சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான ப்ரீமியம் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.