ரூ 95,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது யமஹா FZ V 3.0

யமஹா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட FZ FI V 3.0 மற்றும் FZ-S FI V 3.0 மாடல்களை முறையே ரூ 95,000 மற்றும் ரூ 97,000 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வடிவமைப்பில் நிறைய மாற்றங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஆபிஸ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஒரு சில வடிவமைப்புகள் FZ 25 மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய வடிவமைப்புகள், புதிய சப் பிரேம், புதிய LED முகப்பு விளக்குகள், புதிய LCD இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புதிய அலாய் வீல் மற்றும் புதிய புகைபோக்கி வடிவமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அதே 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின் 13.2 bhp (8000rpm)  திறனும் 12.8 NM (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 57 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் ஹோண்டா CB ஹார்னெட் மற்றும் சுசூகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.