ரூ 54,650 விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரீமியம் ஸ்கூட்டர் மாடலான, டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை ரூ 54,650 டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் LX மற்றும் VX  என இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே ரூ 54,650 மற்றும் ரூ 57,500 டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் USB சார்ஜிங் போர்ட், வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வழி மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. VX வேரியன்ட் மாடலில் கூடுதலாக குரோம் வேலைப்பாடுகளும், அலாய் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பழமையான ஸ்கூட்டர் வடிவமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் i3s எனும்  தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க துணை புரியும். 

இந்த மாடலில் 124.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.7 bhp (6750 rpm) திறனும் 10.2 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் CBS (combined braking system)-உடன் கூடிய  ட்ரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சுசூகி ஆக்சஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.