ரூ. 65,000 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது அப்ரிலிய SR150 ஸ்கூட்டர்

பியாஜ்ஜியோ நிறுவனம் இந்தியாவில்  அப்ரிலிய SR150 ஸ்கூட்டர் மாடலை ரூ. 65,000 டெல்லி ஷோ ரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. வெஸ்பா பிராண்ட் ஸ்கூட்டர்களை விட அப்ரிலிய பிராண்ட் ஸ்கூட்டரை குறைவான விலையில் வெளியிட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஆனால் இது அறிமுக சலுகை விலையாக மட்டுமே இருக்கும் விரைவில் விலை உயர்த்தப்படும்.

இந்த மாடலில் வெஸ்பா மாடலில் உள்ள அதே 154.4 cc என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.4 Bhp  திறனையும் 11.5 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் ஸ்போர்ட்டியான தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  டிஸ்க் ப்ரேக், அலாய் வீல், டிஜிடல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை இந்த மாடலில் கிடைக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் உள்ள பியாஜ்ஜியோ நிறுவன அதிகாரப்பூர்வ டீலர்ஷீப்புகளில் கிடைக்கும். பியாஜ்ஜியோ நிறுவனம் மோட்டோப்லக்ஸ் ஷோரூம்களில் வெஸ்பா, அப்ரிலிய மற்றும் மோட்டோ குஷ்ஷி போன்ற பிராண்டுகளின் பைக்குகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.