BMW நிறுவனம் G310R பைக் மாடலை வெளிப்படுத்தியது.

BMW நிறுவனம் முதன் முதலாக குறைந்த கொள்ளளவு என்ஜின் கொண்ட மாடலான G 310 R பைக் மாடலை வெளிப்படுத்தியது.  இந்த மாடல் முழுவதுமாக ஜெர்மெனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் BMW நிறுவனம் ஓசூரில் உள்ள TVS ஆலையில் உற்பத்தி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இது நேக்ட் மாடல் வகையை சேர்ந்தது.

இந்த மாடலில் 313 cc கொள்ளளவு கொண்ட லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 34 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கும் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமும் கொண்டது. 

மேலும் இதன் விற்பனையை அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஹன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட விலை குறைந்த ஒரு மாடலை TVS நிறுவனம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.