BSIV மாசுக்கட்டுப்பாடு கொண்ட பஜாஜ் பல்சர் RS200 மற்றும் NS200 மாடல்கள் வெளியிடப்பட்டது

பஜாஜ் நிறுவனம் BSIV மாசுக்கட்டுப்பாடு கொண்ட 2017 ஆம் ஆண்டு  பல்சர் RS200 மற்றும் NS200 மாடல்களை வெளியிட்டுள்ளது. ABS  இல்லாத RS200 மாடலை ரூ.1.22 லட்சம் விலையிலும் ABS  உடன் கூடிய  RS200 மாடலை ரூ.1.34 லட்சம் விலையிலும் மற்றும்  NS200 மாடலை ரூ.96435 விலையிலும் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி ஷோரூம் விலை ஆகும்.

இந்த மாடல்களின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய வண்ணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் BSIV மாசுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு என்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடலிலுமே 199.9CC  கொள்ளளவு கொண்ட என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் வெவ்வேறு திறனை வழங்குமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது.

பல்சர் RS200 மாடலில் உள்ள என்ஜின் 24.5 BHP (9750 RPM) திறனும்  18.6 NM (8000RPM) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடல் புதிதாக ரேஸிங் ப்ளூ மற்றும் கிராபைட் கருப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். 

பல்சர் NS200 மாடலில் உள்ள என்ஜின் 23.5 BHP (9500RPM)   திறனும் 18.3 NM (8000RPM)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.. மேலும் இந்த மாடல் புதிதாக மிராஜ் வெள்ளை, வைல்ட் சிவப்பு  மற்றும் கிராபைட் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.