150 CC என்ஜின் கொண்ட அவென்ஜர் மாடலை விரைவில் வெளியிடும் பஜாஜ்

மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலை பஜாஜ்  நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் அதை தொடர்ந்து 150 CC என்ஜின் கொண்ட அவென்ஜர் மாடலும் வெளியிடப்படும் என விவரங்கள் கசிந்துள்ளன. பஜாஜ்  நிறுவனம் எப்போதுமே ஒரு பேரில் பல என்ஜின் கொண்ட மாடல்களை வெளியிடுவது வழக்கம். அதே போல் இந்த மாடலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்தது. வண்ணங்களும் ஸ்டிக்கரும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலில் உள்ள அலாய் வீல்  போலவே உள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் மாடலில் பல்சர் 200 NS மாடலில் உள்ள அதே என்ஜின் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த  பெட்ரோல் என்ஜின்  23.5 bhp (9500rpm)   திறனும் 18.3 NM (8000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அவென்ஜர் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் 150 CC என்ஜின் கொண்ட அவென்ஜர் மாடலை வெளியிடுகிறது என்றும் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.