இரண்டு புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது பஜாஜ் அவென்ஜர் ஷ்ட்ரீட்

பஜாஜ் நிறுவனம் புதிய பச்சை வண்ணத்தில் அவென்ஜர் ஷ்ட்ரீட் 220 மாடலையும் புதிய சிவப்பு வண்ணத்தில் அவென்ஜர் ஷ்ட்ரீட் 150  மாடலையும் வெளியிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அவெஞ்சர் மாடலை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  வெளியிட்டது. புதிய 150 cc என்ஜின் கொண்ட மாடலையும் சேர்த்து  ஷ்ட்ரீட் 150, ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 என மூன்று விதமான அவென்ஜர் மடல்களை வெளியிட்டது.

ஷ்ட்ரீட் 150 மாடலில் 150cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.   இந்த என்ஜின்  14.54 bhp (8400 rpm) திறனும்  12.5 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. ஷ்ட்ரீட் 220 மற்றும் குரூஷ் 220 மாடலில் 219.89cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  19.03 bhp (8400 rpm) திறனும்  17.5 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடல் போலவே இதன் ஷ்ட்ரீட்  மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலாய் வீல் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் மாடலை அதிகமாக நினைவுபடுத்துகிறது. இதன் குரூஷ் 220 மாடலில் கூடுதலாக சில  குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.