ரூ.1.36 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது பஜாஜ் டோமினர் 400

இறுதியாக பஜாஜ் நிறுவனம் டோமினர் மாடலை ரூ.1.36 லட்சம் டெல்லி ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ABS  உடனும் ABS  இல்லாமலும் கிடைக்கும். ABS  இல்லாத மாடல்  ரூ.1.36 லட்சம் விலையிலும் ABS  கொண்ட மாடல்  ரூ.1.5 லட்சம் விலையிலும் கிடைக்கும். இந்த மாடல் தான் பஜாஜ் நிறுவனத்தில் தற்போதைய விலை உயர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் டெலிவரி ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. LED  முகப்பு விளக்குகள், LCD  இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், ABS, தானியங்கி முகப்பு விளக்குகள் என ஏராளமாக கூறலாம். இந்த மாடலில் 373 CC  கொள்ளளவு கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின் 35 BHP திறனையும் 35  NM  இழுவை திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 182  கிலோ கிராம் எடை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 148  கிலோ மீட்டர் வேகம் வரையும் 100  கிலோ மீட்டர் வேகத்தை 8.23  வினாடிகளிலும் கடந்து விடும் வல்லமை கொண்டது. இந்த மாடல் 157  மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. மேலும் 13  லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.