வெளியிடப்பட்டது 2018 பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 180

பஜாஜ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அவெஞ்சர் ஸ்ட்ரீட் 180  மாடலை ரூ 83,475 மஹாராஷ்டிரா ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 150 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் சில ஒப்பனை மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது மற்றபடி வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த மாடலில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மாடலில் உள்ள பகல் நேரத்தில் ஒளிரும் லெட் விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள், V15 மற்றும் V12 மாடல்களில் உள்ளது போன்ற கிராபிக்ஸ் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் பல்சர் 180 மாடலில் உள்ள 178.6 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  15.5 bhp (8500rpm)   திறனும் 13.5 NM (6500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலின் முன்புறத்தில் 260 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS சிஸ்டம் ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் சுசூகி இண்ட்ரூடர் மாடலுக்கு நேர் எதிர் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.