ரூ 67,437 விலையில் வெளியிடப்பட்டது பஜாஜ் பல்சர் கிளாசிக் 150

பஜாஜ் நிறுவனம் பல்சர் மாடலின் புதிய கிளாசிக் 150 வெறியன்டை ரூ 67,437 மும்பை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் மாடலை விட தோராயமாக ரூ 10,000 குறைவான விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில உபகரணங்களும் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

பல்சர் கிளாசிக் 150 மாடலில் பாடி கிராபிக்ஸ், டேங்க் எக்ஸ்டென்ஷன், ரிம் டிப்ஸ் ஆகியவை கொடுக்கப்படவில்லை, மேலும் இந்த மாடலில் வெள்ளை நிற இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கு பதிலாக முந்தய க்ரே நிற கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை. 

இந்த மாடலில் அதே 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  15.06 bhp (9000rpm)   திறனும் 12.5 NM (6500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 64 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடலில் முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.