ரூ 66,790 விலையில் வெளியிடப்பட்டது புதிய பஜாஜ் பல்சர் 150 நியான்

பஜாஜ் நிறுவனம் பல்சர் 150 கிளாசிக் மாடலின் அடிப்படையிலான புதிய பல்சர் 150 நியான் மாடலை ரூ 66,790 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில நியான் வண்ண ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் நியான் வண்ண அலங்காரங்களும், புதிய இருக்கை கவர் மற்றும் புதிய மேட் வண்ணம் ஆகியவை இந்த மாடலில் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் நியான் சிவப்பு, நியான் சில்வர் மற்றும் நியான் மஞ்சள் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை,  அதே 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.06 bhp (9000rpm)  திறனும் 12.5 NM (6500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 64 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடலில் முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.