விரைவில் வெளியிடப்படும் புதிய பஜாஜ் பல்சர் 160NS

பஜாஜ் நிறுவனம் 160cc எஞ்சின் கொண்ட  புத்தம் புதிய பல்சர் 160NS நேக்ட் மாடலை விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாடல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் துருக்கியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் அங்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

இந்த மாடலில் பல்சர் 200NS மாடலின் வடிவம் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் 160.3 cc கொள்ளளவு கொண்ட ஆயில் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15.5 Bhp @ 8500rpm திறனையும் 14.6Nm @ 6500rpm. இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாடல்களில் ABS சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வெளியிட இருக்கும் மாடல்களில் ABS சிஸ்டம் இருக்குமா என்பது சந்தேகமே. மேலும் இந்த மாடல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.