கருப்பு வண்ணத்தில் வெளியிடப்பட்டது பஜாஜ் - பல்சர் RS 200

பஜாஜ் நிறுவனம் புதிய டீமன் கருப்பு வண்ணத்தில் பல்சர் RS 200 மாடலை  வெளியிட்டுள்ளது. மேலும் இதில் சிவப்பு மற்றும் கிரே வண்ண கலவையிலான ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஏற்கனவே விற்கப்படும் மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணத்திலும் தொடர்ந்து கிடைக்கும். 

இந்த மாடலில் 199.5cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.   

இதன் பெட்ரோல் என்ஜின்  24.5 bhp (9750 rpm) திறனும்  18.6 Nm (8000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 4 முதல் 5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 140.8 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.