2017 ஆம் ஆண்டு ஹஸ்க்வர்னா பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஹஸ்க்வர்னா பிராண்டை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவன ஒன்பதாம் வருட ஜெனெரல் மீட்டிங்கில் வெளியிட்டுள்ளது பஜாஜ் நிறுவனம். ஹஸ்க்வர்னா நிறுவனம் KTM  நிறுவனத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் ஆகும். KTM  நிறுவனத்தின் 47 சதவீத பங்குகளை பஜாஜ் நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்க்வர்னா  நிறுவனம் தனது டிர்ட் பைக்குகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவை.  விட்பிளேன் 401 மாடல் தான் ஹஸ்க்வர்னா பிராண்டில் முதலில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் 150 cc முதல் 400 cc வரை உள்ள பைக்குகள் மட்டுமே வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஸ்க்வர்னா பிராண்ட் பைக்குகள் பஜாஜ் நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும். மேலும் KTM  மற்றும்  ஹஸ்க்வர்னா பிராண்டுகளுக்கென பிரத்தியேக ஷோ ரூம்கள் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.