ரூ.1.68 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது பெனெல்லி TNT 25

DSK பெனெல்லி  நிறுவனம் இந்தியாவில் ரூ.1.68 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் புதிய TNT 25 மாடலை வெளியிட்டுள்ளது.  இது DSK பெனெல்லி  நிறுவனத்தின் விலை குறைந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் TNT 300 மாடளுக்கு கீழாக  நிலைநிறுத்தப்படும். 

இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட ஒரு சிலின்டர்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 28.16 Bhp திறனையும் 21.61 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடல் KTM டியூக் மற்றும் மகிந்திரா மோஜோ  மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் ஒரு நேக்ட் மாடல் வகையை சேர்ந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.