ரூ 7.35 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது கேர்பெர்ரி டபுள் பேரல் 1000

1000cc  என்ஜின் கொண்ட ராயல் என்பீல்ட் பைக் மாடலின் ரசிகரா நீங்கள்?. இதோ உங்களுக்காகவே கேர்பெர்ரி நிறுவனம் 1000cc  என்ஜின் கொண்ட டபுள் பேரல் 1000 மாடலை ரூ 7.35 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

கேர்பெர்ரி நிறுவனம் ராயல் என்பீல்ட் கிளாசிக் 500 மாடலை மறுவடிவமைத்து இந்த மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடலில் 1000cc V-ட்வின்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் இரண்டு 500cc  எஞ்சின்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு சிலிண்டரும் 55 டிகிரி கோணத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 53.7Bhp திறனையும் 82Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சினை பொருத்துவதற்கு ஏற்றவாறு ஃபிரேம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கேர்பெர்ரி நிறுவனம் எஞ்சினை மட்டும் ரூ 4.96 லட்சம் விலையில் விற்பனை செய்யவிருக்கிறது. இந்த மாடலை ரூ 1 லட்சம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.