ஜாவா மோட்டார் பைக் மாடலின் தெளிவான படங்கள் இணையத்தில் கசிந்தது

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மகிந்திரா பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனமான BSA பிரண்டை கையகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மேலும் BSA பிராண்டை கையகப்படுத்தியது மட்டுமில்லாமல் ஜாவா பைக்கை மீண்டும் இந்தியா மற்றும் ஒருசில ஆசிய நாடுகளில் வெளியிடும் உரிமத்தையும் பெற்றது மஹிந்திரா நிறுவனம். எனவே விரைவில் இந்திய சாலைகளில் BSA மற்றும் ஜாவா பைக்குகளை காண முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், மஹிந்திரா நிறுவனம் புதிய ஜாவா மோட்டார் பைக் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் என சமூக வலைதள பக்கம் மூலம் அரிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது அதன் தெளிவான படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த மாடல் கிளாசிக் ஜாவா பைக் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாவா பைக் பிரியர்களுக்கு இந்த மாடல் கண்டிப்பாக பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மஹிந்திரா நிறுவனம் எஞ்சின் படங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எஞ்சின் 295CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 27 Bhp திறனும் 28 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் நேரடியாக BSVI மாசுக்கட்டுப்பாட்டில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.