ரூ.19.92 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டுகாடி டியாவெல் டீசல் எடிசன்

டுகாடி நிறுவனம் டியாவெல் டீசல் எடிசன் மாடலை  ரூ.19.92 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் இந்த மாடலை வடிவமைத்துள்ளது டுகாடி நிறுவனம்.

மிகவும் கரடுமுரடாக வெல்டு மற்றும் ரிவெட் ஆகியவை வெளியே தெரியுமாறு ஒரு ரெட்ரோ மாடல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. டியாவெல் மாடலுடன் ஒப்பிடும் பொது நிறைய வேறுபாடுகள் உள்ளது. இந்த மாடலில் புதிய இரட்டை புகைபோக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வெறும் 666 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும்.

இந்த மாடலில் 1262 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 156 bhp திறனையும் 128.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.