மல்டிஸ்ட்ரடா 950 மற்றும் மான்ஸ்டர் 797 பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டது டுகாடி

இத்தாலியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாடி இந்தியாவில் ரூ. 12.6 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மல்டிஸ்ட்ரடா 950 மற்றும் ரூ. 7.77 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் மான்ஸ்டர் 797 மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே முறையே மல்டிஸ்ட்ரடா மற்றும் மான்ஸ்டர் சீரீஸின் சிறிய பைக்குகள் ஆகும். 

மல்டிஸ்ட்ரடா 950 

மல்டிஸ்ட்ரடா 950 மாடலில் மல்டிஸ்ட்ரடா 1200 மற்றும் மல்டிஸ்ட்ரடா எண்டுரோ மாடல்களின் வடிவம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை புகைபோக்கி, ஹாலோஜென் முகப்பு விளக்கு என சில வேறுபாடுகளை மட்டுமே இந்த மாடல் பெற்றுள்ளது. இந்த மாடலில் 937 cc கொள்ளளவு கொண்ட L-ட்வின்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115PS @ 9000rpm  திறனையும் 96.2Nm @ 7750rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் ABS மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் என்டுரோ என நான்கு டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. 

மான்ஸ்டர் 797 

மான்ஸ்டர் 797 மாடலில் மான்ஸ்டர் 821 மற்றும் 1200  மாடல்களில் வடிவங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாடலிலும் சில வேறுபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டுகாடி ஸ்க்ராம்ப்ளார் மாடலில் உள்ள 803 cc கொள்ளளவு கொண்ட L-ட்வின்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 76PS @ 8250rpm  திறனையும் 68.9Nm @ 5750rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலிலும் ABS  நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.