வெளிப்படுத்தப்பட்டது 2018 ஆம் ஆண்டு டுகாட்டி மான்ஸ்டர் 821

டுகாட்டி நிறுவனம் புத்தம் புதிய 2018 ஆம் ஆண்டு மான்ஸ்டர் 821 மாடலை வெளிப்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட முதல் மான்ஸ்டர் 900 மாடலின் வடிவமைப்பு தான் இந்த மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி வடிவமைத்துள்ளது டுகாட்டி நிறுவனம்.

இந்த மாடலில் புதிய முகப்பு விளக்குகள், புதிய டேங்க், புதிய பின்புற வடிவமைப்பு மற்றும் புதிய புகைபோக்கி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மஞ்சள், சிவப்பு மற்றும் மேட் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலில் மல்டிஸ்ட்ரடா மாடலில் உள்ளது போல் TFT இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கியர் பொசிசன், எரிபொருள் அளவு ஆகியவை காண முடியும். இந்த மாடலில் முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 245 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ABS  பிரேக்கும் நிரந்தர வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் BSIV மாசுக்கட்டுப்பாடு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 109Bhp திறனையும் மற்றும் 86Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் அர்பன், டூரிங் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும் மற்றும் எலெட்ரானிக் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.