ரூ 10.91 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளார் 1100

டுகாட்டி நிறுவனம் ஸ்க்ராம்ப்ளார் 1100 மாடலை ரூ 10.91 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் மூன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூ10.91 லட்சம் விலையிலும், ஸ்பெஷல் வேரியன்ட் ரூ 11.12 விலையிலும் மற்றும் ஸ்போர்ட் வேரியன்ட் ரூ 11.42 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடல் தான் ஸ்க்ராம்ப்ளார் மாடல்களிலேயே பெரிய எஞ்சின் கொண்ட மாடல் ஆகும். இந்த புதிய ஸ்க்ராம்ப்ளார் 1100 மாடல் முந்தய ஸ்க்ராம்ப்ளார் மாடல் வடிவமைப்பிலேயே தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய இரட்டை புகைபோக்கி, புதிய நம்பர் பிளேட் ஹோல்டர் என சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 1079cc கொள்ளளவு கொண்ட L-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86Bhp திறனையும் 88.4Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஸ்லிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 320 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 245 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டமும், ஆக்டிவ், டூரிங் மற்றும் சிட்டி என மூன்று ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.