ரூ 8.52 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளார் மாக் 2.0

டுகாட்டி நிறுவனம் ஸ்க்ராம்ப்ளார் மாக் 2.0 மாடலை ரூ 8.52 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. டுகாட்டி நிறுவனம் கலிபோர்னியாவை சேர்ந்த ரோலண்ட் சேண்ட்ஸ் கஸ்டமைசேஷன் நிறுவனத்துடன் இனைந்து இந்த மாடலை உருவாக்கியுள்ளது. இந்த மாடல் ஸ்க்ராம்ப்ளார் கிளாசிக் மற்றும் ஸ்க்ராம்ப்ளார் கேஃப் ரேசர் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் மற்றும் புதிய கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 803 cc கொள்ளளவு கொண்ட L-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 74Bhp திறனையும் 68Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் இந்தியாவில் உள்ள அணைத்து டுகாட்டி ஷோரூம்களிலும் தற்போது கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.