ரூ.15.87 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டுகாடி X டியாவெல்

டுகாடி நிறுவனம் X டியாவெல் மற்றும் X டியாவெல் S மாடல்களை முறையே ரூ.15.87 லட்சம் மற்றும் ரூ.18.47 லட்சம் டெல்லி ஷோரூம்  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த  மாடல் டியாவெல் மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேலும் இது 2015 ஆம் ஆண்டு  EICMA  மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த மாடலில் 1262 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 156 bhp திறனையும் 128.5 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட், ஆண்டி லாக் ப்ரேக் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும். டியாவெல் மாடல் தான் டுகாடி நிறுவனத்தின் முதல் குரூசர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் தான் டுகாடி நிறுவனத்தில் முதல் பெல்ட் டிரைவ் கொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.