EICMA 2015: 399cc கொண்ட ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2 மாடலை வெளிப்படுத்தியது டுகாடி

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வரும் EICMA எனும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் ஏற்கானவே விற்பனையில் இருக்கும் ஸ்க்ராம்ப்ளர் மாடலின் அடிப்படியில் உருவாக்கப்பட்ட 399 cc  கொண்ட ஸ்க்ராம்ப்ளர் சிக்ஸ்டி2 மாடலை வெளிப்படுத்தியது டுகாடி நிறுவனம். வடிவத்தில் பழைய ஸ்க்ராம்ப்ளர் மாடலில் இருந்து அதிக மாற்றங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக முன்புற போர்க் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.

இதில் புதிய 399 cc கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 41 bhp திறனை வழங்கும். இந்த மாடலில் முன்புறத்தில் 320 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்கும்  பின்புறத்தில்  245 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் தோராயமாக 6 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.