EICMA 2015: இந்தியாவுக்கான ரெனெகட் ஸ்போர்ட்ஸ் S மாடல் வெளிப்படுத்தப்பட்டது

UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரெனெகட் மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட ரெனெகட் ஸ்போர்ட்ஸ் S மாடலை வெளியிட்டுள்ளது. இது ரெனெகட் மாடலில் இருந்து சில ஒப்பனை மாற்றங்களை மட்டும் பெற்றுள்ளது. குறிப்பாக முகப்பு விளக்கின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடல் தான் இந்தியாவில் முதலில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

UM மோட்டார் சைக்கிள் நிறுவனம் லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பைக்குகளை 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட இருக்கிறது. இதன் க்ரூசர் பைக் மாடல்கள் மட்டும் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மாடல்கள் 300 cc கொள்ளளவு கொண்டதாக இருக்கும். ராயல் என்ஃபீல்ட்  மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

உத்தரகண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவன ஆலையில் இந்த மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மற்ற மாடல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.