EICMA 2015: MT-10 மற்றும் XSR900 கேப் ரேசர் மடல்களை வெளிப்படுத்தியது யமஹா

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து வரும் EICMA எனும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் MT - 10 மற்றும் XSR 900 கேப் ரேசர் மடல்களை வெளிப்படுத்தியது யமஹா நிறுவனம். EICMA என்பது மோட்டார் சைக்கிள்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக நடத்தப்படும் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

MT - 10 மாடல் ஒரு ஸ்ட்ரீட் பைட்டர் மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் YZF-R1 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வித்தியாசமான இரட்டை முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் YZF-R1 மாடலில் உள்ள அதே 998 cc கொள்ளளவு கொண்ட 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 165 bhp திறனையும் 101 Nm இழுவைதிறனையும் வழங்கும்.

மேலும் இந்த மாடலில் ட்ராக்சன் கன்ட்ரோல், ரைடர் மோட் மற்றும் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியாவை கிடைக்கும். இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெளியிடப்படும் எனவும் தோராயமாக 14 முதல் 15 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா நிறுவனம்  XSR 900 எனும் பாரம்பரிய  கேப் ரேசர் மாடலையும் காட்சிப்படுத்தியது. இது MT - 09 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. MT - 09 மாடலின் வெளிப்புற வடிவங்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் MT - 09 மாடலில் உள்ள 847 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் செயல்திறன் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் கிரே, ப்ளூ மற்றும் மஞ்சள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். 

மேலும் இந்த மாடலும்  2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.