EICMA 2018: புத்தம் புதிய KX பைக் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது ராயல் என்பீல்ட்

ராயல் என்பீல்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் வடிவிலான புத்தம் புதிய KX பைக் கான்செப்ட் மாடலை இத்தாலியில் நடைபெறும் 2018 EICMA மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த மாடல் 1938 ஆம் ஆண்டு ராயல் என்பீல்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வந்த KX மோட்டார் பைக் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய 838cc V-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் ஒரு கான்செப்ட் மாடல் மட்டுமே தயாரிப்புக்கு எடுத்து செல்லப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.