இறுதியாக இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW G 310 R மற்றும் G 310 GS

BMW நிறுவனம் இறுதியாக BMW G 310 R மற்றும் G 310 GS மாடல்களை இந்தியாவில் முறையே ரூ 2.99 லட்சம் மற்றும் ரூ 3.49 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. BMW நிறுவனம் முதன் முதலாக குறைந்த கொள்ளளவு என்ஜின் கொண்ட மாடலான G 310 R பைக் மாடலை 2015 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் முழுவதுமாக ஜெர்மெனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், BMW நிறுவனம் ஓசூரில் உள்ள TVS ஆலையில் இந்த மாடலை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மாடல்களிலும் 313 cc கொள்ளளவு கொண்ட லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 34 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கும் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான் TVS அப்பாச்சி RR 310 மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் ஸ்பீட், கியர் பொசிசன், ஓடோ மீட்டர், டேக்கோ மீட்டர், எரிபொருள் அளவு மற்றும் கடிகாரம் ஆகியவைகளை கொண்ட முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு மாடலும் வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.