இறுதியாக ஜூலை 18 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் BMW G 310 R மற்றும் G 310 GS

BMW நிறுவனம் இறுதியாக BMW G 310 R மற்றும் G 310 GS மாடல்கள் இந்தியாவில் அடுத்த மாதம் (ஜூலை) 18 ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. BMW நிறுவனம் முதன் முதலாக குறைந்த கொள்ளளவு என்ஜின் கொண்ட மாடலான G 310 R பைக் மாடலை 2015 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் முழுவதுமாக ஜெர்மெனியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் BMW நிறுவனம் ஓசூரில் உள்ள TVS ஆலையில் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மாடல்களிலும் 313 cc கொள்ளளவு கொண்ட லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 34 Bhp திறனையும் 28 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கும் ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான்  TVS அப்பாச்சி RR 310 மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

BMW G 310 R மாடல் நேக்ட் மாடல் வகையையும், G 310 GS மாடல் அட்வென்ச்சர் டூரர் மாடல் வகையையும் சேர்ந்தது. இந்த மாடல்களின் முன்பதிவு அணைத்து BMW ஷோரூம்களிலும் ரூ 50,000 முன்பணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் BMW G 310 R மாடல் நேக்ட் மாடல் ரூ 3.5 லட்சம் விலையிலும், BMW G 310 GS மாடல் அட்வென்ச்சர் டூரர் மாடல் ரூ 3.8 லட்சம் விலையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.