ஹார்லி டேவிட்சன் புதிய ஷோரூமை கோவையில் தொடங்கியது

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை கோவையில் தொடங்கியுள்ளது. இது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தால் இந்தியாவில் தொடங்கப்பட்ட 21 வது ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்டர்ன் காட்ஸ் நிறுவனம் இந்த ஷோரூமை தொடங்கியுள்ளது. இந்த ஷோ ரூம் எண் - 1018, அவினாசி சாலை, கோயம்புத்தூர் - 641018. என்ற முகவரியில் அமைந்துள்ளது. 

இந்த ஷோ ரூம் 8000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் புதிய ஹார்லி டேவிட்சன் மாடல்கள், சர்வீஸ், உதிரி பாகங்கள் மற்றும் கஷ்டம் உபகரனங்கள என அனைத்தும் கிடைக்கும். 

தென் மாவட்டங்களில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாலும் மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கவும் இந்த ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இது இரண்டாவது ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.